ஆயுஷ்
புதுதில்லியில் ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யாபீடம் சார்பில் அஸ்தி மர்மம் குறித்த ஆயுர்வேத பயிற்சி
Posted On:
27 SEP 2025 9:42AM by PIB Chennai
புதுதில்லியில், ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யாபீடம் மற்றும் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும் இணைந்து அஸ்தி மர்மம் குறித்த இரண்டு நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தின.
பத்ம விருது பெற்ற வைத்தியர் திரு தேவேந்திர திரிகுணா இதனைத் தொடங்கி வைத்து, நவீன சுகாதார சவால்களை எதிர்கொள்ள பாரம்பரிய ஆயுர்வேத அறிவை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆயுர்வேத வல்லுநர்களால் நடத்தப்பட்ட இந்த அமர்வுகளில், அஸ்தி மர்மத்தின் கோட்பாடுகள் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து விரிவாகக் கற்பிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி, ஆயுர்வேத பயிற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்தி, ஆதார அடிப்படையிலான மருத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172037
***
SS/EA/RJ
(Release ID: 2172132)
Visitor Counter : 15