பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய ‘’அனைவரின் திட்டம், அனைவரின் வளர்ச்சி’’ இயக்கம்

प्रविष्टि तिथि: 27 SEP 2025 11:07AM by PIB Chennai

நாடு தழுவிய அளவில் "அனைவரின் திட்டம், அனைவரின் வளர்ச்சி" இயக்கத்தை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்குகிறதுஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த இயக்கம் நடைபெறும்இது 2026-27 நிதியாண்டிற்கான பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களை  தயாரிப்பதற்கான வழிமுறையைத் தொடங்குகிறது. 2018-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த இயக்கம், பஞ்சாயத்துகளின்  உள்ளூர் முன்னுரிமைகளை பிரதிபலித்து வருகிறது. சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் தேசிய இலக்குகளுடன் ஒத்துப்போகும் சான்றுகள் அடிப்படையிலான, ஒன்றிணைந்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க உதவியுள்ளது.

2025–26 ஆம் ஆண்டு மக்கள் திட்டப் பிரச்சாரத்திற்குத் தயாராவதற்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மாநில/யூனியன் பிரதேசங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மெய்நிகர் தொடர்புகளைத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 26 அன்று, அமைச்சகத்தின்  கூடுதல் செயலாளர் திரு சுஷில் குமார் லோஹானி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பை நடத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172058

***

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2172123) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam