சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒழுக்கம் மற்றும் தூய்மையை பண்பாட்டின் ஒரு அங்கமாக கொண்டு செல்லும் வகையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

Posted On: 25 SEP 2025 11:30AM by PIB Chennai

பணியிடங்களை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் விரிவான தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்முயற்சிகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாஸ்திரிபவன் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் அனைவரும் ஒன்றிணைந்து தூய்மைப் பணியை நாடு தழுவிய தன்னார்வலப் பணியாக மேற்கொள்வதற்கான முன்முயற்சியை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

நீடித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனைத்துப் பணியாளர்களின் நலவாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தூய்மை மற்றும் துப்பரவுப் பணிகளை இந்த அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதனுடன் தூய்மையே சேவை 2025-க்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியிடங்களில் தூய்மை, சுத்தம் மற்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்கும் வகையில் அதனை ஒரு கலாச்சார நடவடிக்கையாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாடு முழுவதும் பண்டிகை காலங்களுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171011

------

SS/SV/KPG/SH


(Release ID: 2171408) Visitor Counter : 5
Read this release in: English , Urdu , Hindi , Punjabi