ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பத்தாவது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது

Posted On: 23 SEP 2025 2:08PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் 10-வது தேசிய ஆயுர்வேத தினக் கொண்டாட்டம் கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவா ஆளுநர் திரு அசோக் கஜபதி ராஜூ, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய ஆயுஷ்த்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய கோவா ஆளுநர், உலகளவில் ஆயுர்வேத சிகிச்சையின் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டிற்கும் குறைவான காலத்திற்குள் ஆயுர்வேத தினம் தேசிய அளவில் இருந்து உலக அளவில் ஒரு சுகாதார இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 150-க்கும் மேற்பட்ட நாடுகள் தேசிய ஆயுர்வேத தினத்தை கொண்டாடுவதாகவும், ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சை மட்டுமின்றி சுகாதார அமைப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170053

***

SS/GK/AG/SH

 


(Release ID: 2170385)