உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியைப் பிரதமர் செப்டம்பர் 25 அன்று புதுதில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்

Posted On: 23 SEP 2025 12:34PM by PIB Chennai

உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025 செப்டம்பர் 25 முதல் 28 வரை நடத்தவுள்ளது. ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய உலகளாவிய உணவு கண்காட்சியில் 21-க்கும் மேற்பட்ட நாடுகள், 21 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 10 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 5 அரசு துணை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 

இக்கண்காட்சியை 2025 செப்டம்பர் 25 அன்று மாலை 6 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தொடக்க நிகழ்ச்சியில் ரஷ்ய துணை பிரதமர் திரு திமித்ரி பத்ருஷேவ், மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான், இணையமைச்சர் திரு ரவ்னித் சிங் பிட்டு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து குறிப்பிட்ட மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு சிராக் பஸ்வான், உலக உணவு இந்தியா கண்காட்சி என்பது வெறும் வர்த்தக காட்சியாக மட்டுமல்லாமல், உணவு புதுமைக்கண்டுபிடிப்புகள், முதலீடு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்காக உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை மாற்றியமைப்பதற்கான தளமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

நியூசிலாந்து மற்றும் சவுதி அரேபியா நாடுகள் இக்கண்காட்சியின் கூட்டாண்மை நாடுகளாகவும், ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியாட்நாம் ஆகியவை கவனம் செலுத்தப்படும் நாடுகளாகவும் இருக்கும்.  1700-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட சர்வதேச கொள்முதலாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169983

***

SS/IR/RJ/KR


(Release ID: 2170102)