இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'போதைப்பொருள் இல்லாத இந்தியா' தொடர்பான இளைஞர் உச்சி மாநாடுகள் நாடு முழுவதும் 2000 இடங்களில் நடைபெற்றன - 60 ஆன்மீக அமைப்புகள் வழிநடத்தின

Posted On: 21 SEP 2025 4:30PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, வரை இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சேவை இயக்கத்தை நடத்துகிறதுஇந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வாரணாசியில் நடைபெற்ற இளைஞர் ஆன்மீக உச்சிமாநாட்டின் அடிப்படையில், போதைப் பொருள் இல்லாத இந்தியாவையும் இளைஞர்களையும் உருவாக்குவது தொடர்பான உச்சி மாநாடுகள், இந்த சேவை விழாவின் ஒரு பகுதியாக, இன்று (2025 செப்டம்பர் 21) நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் 2000-க்கும் அதிகமான இடங்களில், அந்த இளைஞர் உச்சிமாநாடுகள் நடைபெற்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டாக போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி, தற்சார்பு இந்தியா உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு ஆன்மீக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டன. இது, ஆரோக்கியமான, வலுவான, தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தை உருவாக்குவதற்கான தேசிய பார்வையை வலுப்படுத்துகிறது.

ஈஷா அறக்கட்டளை, இஸ்கான், சின்மயா மிஷன், பிரம்மா குமாரிகள் அமைப்பு, மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம், பதஞ்சலி, நாம்தாரி சீக்கிய சங்கத், சூஃபி இஸ்லாமிய வாரியம் போன்ற 60 அமைப்புகள் இதில் பங்கேற்று இவற்றை வழிநடத்தின. யோகா, தியான அமர்வுகள், சத்சங்கங்கள், கலாச்சார நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

***

(Release ID: 2169255)

AD/PLM/RJ


(Release ID: 2169354)