குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காதி மஹோத்சவத்தில் பல்வேறு நிகழ்வுகள் - கேவிஐசி ஏற்பாடு

Posted On: 21 SEP 2025 1:41PM by PIB Chennai

காதி, கிராம தொழில்கள் ஆணையமான கேவிஐசி-யின் தலைவர் திரு மனோஜ் குமார், வாரணாசியில் காதி மஹோத்சவ் 2025- 2025 செப்டம்பர் 17 அன்று தொடங்கி வைத்தார். 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 23 வரை நாடு முழுவதும் இது கொண்டாடப்படும்.

செப்டம்பர் 17 முதல் 19 வரை, மும்பையில் உள்ள கேவிஐசி தலைமையகத்தில் சுதேசி, தூய்மை ஆகியவை தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 18-ம் தேதி மும்பையின் ஜூஹு கடற்கரையில் ஒரு சிறப்பு தூய்மை இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

செப்டம்பர் 19-ம் தேதி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஊழியர்கள், அதிகாரிகளுக்கு, கேவிஐசி தலைவர் சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்கடந்த 11 ஆண்டுகளில், காதி குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை அடைந்துள்ளது எனவும் அதன் வணிகம் 1.70 லட்சம் கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். காதி மஹோத்சவத்தில், மும்பை மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 'உள்ளூர் மக்களுக்கான குரல்' என்ற உணர்வோடு சுதேசிக்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

***

(Release ID: 2169196)

AD/PLM/RJ


(Release ID: 2169252)