நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் கடன் பத்திரங்கள் மீதான மதிப்பீடு பிபிபி+ ஆக உயர்ந்துள்ளது - ஜப்பான் முதலீட்டு தரவு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம்

Posted On: 19 SEP 2025 4:01PM by PIB Chennai

ஜப்பானின் கடன் மதிப்பீட்டு முகமை, முதலீடு மற்றும் தரமதிப்பீட்டு தரவு நிறுவனம் இந்தியாவின் நீண்டகால  கடன் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை பிபிபி நிலையிலிருந்து பிபிபி+ ஆக உயர்த்தி உள்ளதற்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எஸ்&பி தர மதிப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே கடந்த மே மாதத்தில் பிபிபி மதிப்பீட்டை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் மிகப்பெரிய மற்றும் விரைவான வளர்ச்சி கண்டுவரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த தர மதிப்பீடுகள் அமைந்துள்ளனஅரசின் வலுவான கொள்கைகள் உள்நாட்டு தேவைகள் பங்கு பத்திரங்கள் மீதான ஈவுத்தொகை போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையின் நிலை மற்றும் அந்நிய பணப்பரிவர்த்தனைகள் ஆகியவை நிலையாக நீடிப்பதை இது எடுத்துரைக்கிறது.

மூலதனச் செலவினங்களை மத்திய அரசு அதிகரித்து வரும் நிலையிலும் நாட்டின் நிதிசார் அமைப்புகள் வலுவான நிலையில் உள்ளன. வலுவான உள்நாட்டு தேவைகள் வரி வருவாய் ஆகியவை அதிகரித்து வருவதால் நிதி பற்றாக்குறை குறைந்து வருவதையும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் கருத்தில் கொண்டு தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168484     

***

AD/SMB/AG/RJ


(Release ID: 2168959)