பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமை உணர்வுடன் எவ்வித சமரசமின்றி ஒவ்வொரு ராணுவ வீரரும் பணியாற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பெருமிதம்

Posted On: 19 SEP 2025 1:42PM by PIB Chennai

நாட்டின் வலிமைக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம்  வெற்றியை முடிவு செய்தும், நாட்டின் பாதுகாப்பிற்காக கடமை உணர்வுடன் உயிர்த் தியாகம் செய்த  ஒவ்வொரு துணிச்சலான வீரர்களுக்கும் மரியாதை செலுத்துவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  புதுதில்லியில் நாடாளுமன்று வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாகிஸ்தானுடனான போரில் இந்தியா அடைந்த வெற்றியைக் குறிக்கும் வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இந்தப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருடன் அவர் கலந்துரையாடினார். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமை உணர்வுடன் எவ்வித சமரசமின்றி ஒவ்வொரு ராணுவ வீரரும் பணியாற்றி வருவதாக  அவர் கூறினார். 60 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இந்தியாவில் ஊடுருவதன் மூலமும், கொரில்லா முறையிலான தாக்குதல்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்திய வீரர்களை வெற்றிக் கொண்டு விடலாம் என்று  நினைத்து மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவ வீரர்கள் வீரத்துடனும் துணிச்சலுடனும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வெற்றி தேடித்தந்ததாக அமைச்சர் கூறினார்.

அசுல் உத்தர், சவீந்தா மற்றும் பிலோரா ஆகிய போர்கள் உட்பட இந்திய வீரர்கள் எதிர்கொண்ட பல்வேறு வகையான போர்களில் அவர்களது துணிச்சலையும் நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்திய விதத்தை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். அசல் உத்தர் போரின் போது எதிரிகளின் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதல்களை எதிர்கொண்டு அவர்களது எண்ணற்ற பீரங்கிகளை அழித்து வீரத்துடனும், நாட்டுப் பற்றுடனும் உயிர்த் தியாகம் செய்த பரம்வீர் சக்ரா விருது பெற்ற அப்துல் அமீதுக்கு  மரியாதை செலுத்துவதாக திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

***

SS/SV/KPG/KR/SH

 
 
 

(Release ID: 2168794)