ஆயுஷ்
மக்கள் மற்றும் பூமியின் நலத்திற்கான ஆயுர்வேதம் நாட்டின் நீடித்த சுகாதாரத்தை உறுதி செய்கிறது
Posted On:
19 SEP 2025 1:54PM by PIB Chennai
ஆயுர்வேத மருத்துவமுறை முழுமையான மருத்துவ சிகிச்சை முறையாக இருப்பதுடன் நமது சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த சுகாதார முறையாகவம் திகழ்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் தேசிய ஊடக மையத்தில் ஆயுர்வேத தினம் 2025-க்கான நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார். இம்மாதம் 23-ம் தேதி அன்று கோவாவில் உள்ள அகிலஇந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் 10-வது ஆயுர்வே தினம் கொண்டாடப்பட உள்ளது.
ஆயுர்வேத மருத்துவமுறை, மருத்துவ அறிவியலைக் காட்டிலும் மேலானதாகும். சுற்றுச்சூழலுடன் இயைந்த வாழ்வியல் முறைக்கு ஆயுர்வேத மருத்துவமுறை உதவுகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மருத்துவ முறையாகும்.
ஆயுர்வே தினத்திற்கான தேதியை 23 செப்டம்பராக அறிவிப்பதன் மூலம் மத்திய அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு நடைபெறும் ஆயுர்வேத தினத்திற்கான கருப்பொருள் மக்கள் மற்றும் பூமியின் நலவாழ்விற்கான ஆயுர்வேதம் என்பதாகும்.
----
SS/SV/KPG/KR/SH
(Release ID: 2168792)