ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்தில் மத்திய ஜவுளி அமைச்சகம் பங்கேற்றுள்ளது

Posted On: 18 SEP 2025 1:55PM by PIB Chennai

அன்றாட வாழ்க்கையில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைக் கடைபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள தூய்மையே சேவை 2025 இயக்கத்தில் மத்திய ஜவுளி அமைச்சகம் பங்கேற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இயக்கம் 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்  சமூக விழிப்புணர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், தொடர் முன்முயற்சிகள், அமைச்சகம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் நடைபெறவுள்ளன. அலுவலக வளாகங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஊழியர்கள், மாணவர்கள், சமுதாயக் குழுக்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்பணிகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

இதையொட்டி, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான தூய்மை உறுதிமொழியை புதுதில்லியில் உள்ள ஜவுளித்துறை அமைச்சக ஊழியர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

***

SS/IR/KPG/KR/SH


(Release ID: 2168281)