சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றில் மத்திய சுற்றுலா அமைச்சகம் ஈடுபடுகிறது

प्रविष्टि तिथि: 18 SEP 2025 12:40PM by PIB Chennai

மத்திய சுற்றுலா அமைச்சகம் சிறப்பு இயக்கம் 5.0-வில் பங்கேற்று தூய்மைப்  பணிகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்யவும் உறுதி பூண்டுள்ளது. இப்பணிகளுக்குத் தயார்படுத்தலுக்கான கூட்டம் 2025 ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. அப்போது சிறப்பு இயக்கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய குறிப்பிட்ட இலக்குகள் குறித்து கண்டறியுமாறு சுற்றுலா அமைச்சகத்தின் உள்ளூர் அலுவலகங்கள், நிறுவனங்கள், நிகழ்ச்சிப் பிரிவு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தூய்மைப்படுத்தப்பட வேண்டிய இடங்கள், இடமேலாண்மை, அழகுபடுத்துதல் ஆகியவற்றைக் கண்டறிதல், பழைய மற்றும் தேவையற்றப் பொருட்களை அகற்றுதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகளின் குறிப்புகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணுதல், பொதுமக்களின் குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்குத் தீர்வு காணுதல், விதிமுறைகளை எளிமைப்படுத்துதல், மின்னணு கழிவுப் பொருட்களை கண்டறிந்து அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சிறப்பு இயக்கம் 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167961

---- 

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2168035) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam