மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
துபாயின் பட்டத்து இளவரசர், துபாயில் ஐஐஎம் அகமதாபாத்தின் முதல் வெளிநாட்டு வளாகத்தைத் திறந்து வைத்தார்.
Posted On:
11 SEP 2025 6:24PM by PIB Chennai
துபாயின் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இந்தியாவின் முதன்மை வணிகக் கல்வி நிறுவனமான அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தின் (ஐஐஎம்ஏ) முதல் வெளிநாட்டு வளாகத்தை துபாயில் திறந்து வைத்தார். மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சர் மேதகு டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னன் அல் அவார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு. பிரதான், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், இந்தியக் கல்வியின் உலகமயமாக்கலை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க எழுச்சியாக இந்த வளாகத்தின் திறப்பு விழா அமைந்திருக்கிறது, என்றார். ஐஐஎம் அகமதாபாத்தின் துபாய் வளாகம், இந்தியாவின் சிறந்த செயல்பாட்டை உலகிற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார். இந்திய-ஐக்கிய அரபு அமீரக அறிவுசார் ஒத்துழைப்பில் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தித் தந்ததற்காக திரு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னன் அல் அவாரை திரு பிரதான் சந்தித்துப் பேசினார். உயர்கல்வியில் இருதரப்பு ஒத்துழைப்பை இருவரும் மதிப்பாய்வு செய்து, அறிவுப் பாலங்களை மேலும் ஆழப்படுத்தவும், ஞானம், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியை விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முக்கிய அங்கமாக மாற்றவும் ஒப்புக்கொண்டனர். முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் இருவழி கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்றங்கள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165763
***
(Release ID: 2165763)
AD/BR/KR
(Release ID: 2165941)
Visitor Counter : 2