சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் நாட்டில் தற்போது டெங்கு மற்றும் மலேரியா பரவல் குறித்து மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
11 SEP 2025 2:11PM by PIB Chennai
மாநிலங்கள் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் நாட்டில் தற்போது டெங்கு மற்றும் மலேரியா பரவலின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமையில் செப்டம்பர் 10, 2025 அன்று நடைபெற்றது. சுகாதாரச் செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா மற்றும் அமைச்சகத்தின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின்போது, டெங்கு மற்றும் மலேரியாவின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளின் முன்னேற்றம் மற்றும் அதில் ஏற்படும் முக்கிய சவால்கள் பற்றி திரு நட்டா கேட்டறிந்தார். பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, குறிப்பாக பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய இந்த காலகட்டத்தில், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூகங்களை அவர் வலியுறுத்தினார்.
வரும் மாதங்களில் மேலும் விழிப்புடன் இருக்குமாறும், டெங்கு மற்றும் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் அனைத்து முதலமைச்சர்களுக்கும் அறிவிக்கையின் வாயிலாக மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
***
BAK/AD/SH
(Release ID: 2165867)
Visitor Counter : 2