நிதி அமைச்சகம்
உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 126.4 மில்லியன் கடனுதவிக்கான ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
11 SEP 2025 1:09PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலத்தில் டெஹ்ரி லேக் பகுதியில் அனைத்து பருவநிலைக்கும் ஏற்ற வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 126.42 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனுதவி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான உத்தராகண்ட் மாநில அரசின் செயல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் பருவ கால சூழலுக்கு ஏற்ப மீள்தன்மையுடன் கூடிய கட்டமைப்புகள் வருவாய் அதிகரிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், நீர்மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள 87,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் பயனடைவதுடன் 2.7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
***
AD/SV/AG/SH
(रिलीज़ आईडी: 2165843)
आगंतुक पटल : 37