சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பசுமை வளர்ச்சிக்கான நடவடிக்கைளுக்கு, பசுமை கடன் பத்திர வெளியீடு, சர்வதேச முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை வலுப்படுத்தும்- மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ்

Posted On: 11 SEP 2025 11:20AM by PIB Chennai

வளர்ச்சியை மையமாகக் கொண்டு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்ற பசுமை நிதிசார் நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொதுத்துறை, தொழில்துறை, ஒழுங்குமுறை அமைப்புகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலக அளவில் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வரும் வெப்பநிலை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறினார். தொழில்துறை நிறுவனங்கள் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் செலவிட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 21-ம் நூற்றாண்டில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இரண்டுவிதமான பொறுப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பெருமளவிலான மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாட்டில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதும், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து பூமியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார். பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் இழப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படத்தக் கூடியது என்று அவர் தெரிவித்தார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் பசுமை வளர்ச்சிக்கான நடவடிக்கைளுக்குபசுமை கடன் பத்திர வெளியீடுசர்வதேச முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை வலுப்படுத்தும் என்று திரு பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.

                                                                                                                      ***

AD/SV/AG/KR/SH


(Release ID: 2165771) Visitor Counter : 2