ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில்முனைவோருக்கான பயிற்சி - மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை

Posted On: 11 SEP 2025 10:47AM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள 90 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்களில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் இணைந்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கை தொடங்கிவைத்து  உரையாற்றிய அவர், இவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில்முனைவோராக உள்ளனர் என்று கூறினார்.  சோதனை அடிப்படையில் அசாம், பீகார், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கு வெற்றிகரமாக அமைந்தது என்று அவர் கூறினார். இதனையடுத்து கேரளா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இதர மாநிலங்களில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பெண்கள் தலைமையிலான தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு இந்தப் பயிலரங்குகள் உதவிடும் என்று அவர் கூறினார்.

இந்த 2 நாள் பயிலரங்கை மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை கேரள மாநில ஊரக இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165528

***

AD/SV/AG/KR


(Release ID: 2165681) Visitor Counter : 2