நித்தி ஆயோக்
பன்முகப் பரிமாணம் கொண்ட வறுமை குறியீடு குறித்த தேசியப் பயிலரங்கு - நித்தி ஆயோக், ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து ஏற்பாடு
Posted On:
10 SEP 2025 2:41PM by PIB Chennai
இந்தியாவின் பல்வகை வறுமை குறியீடு தொடர்பான செயல்பாடுகள், மக்கள் தொடர்பு மற்றும் தேசிய அளவிலான திறன் மேம்பாட்டை மதிப்பீடு செய்வதற்குப் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப வழிமுறை குறித்து இந்தப் பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
‘தேசிய அளவிலான பல்வகை வறுமை குறியீடு குறித்த ஒருநாள் பயிலரங்கை மக்கள் தொடர்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில், ஐ.நா. சபை மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து, மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிலரங்கு செப்டம்பர் 9, 2025 அன்று தில்லியில் நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் அமைப்புகள் (ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி), ஐ.நா. மக்கள் ஒத்துழைப்பு அமைப்பு (யுஎன்ஆர்சிஓ), சிந்தனையாளர்கள் (பொருளாதார வளர்ச்சி நிறுவனம், இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ரூர்க்கி, என்சிஏஇஆர், சிஇஇடபிள்யு, மனித மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நட்ஜ் நிறுவனம்) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு. சுமன் கே. பெரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், இஏசி-பிஎம் தலைவர் பேராசிரியர் எஸ். மகேந்திர தேவ், நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி. கே. பால், இந்தியாவில் உள்ள ஐ.நா.சபையின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் திரு. ஷோம்பி ஷார்ப், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகச் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க்; ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மக்கள் மேம்பாட்டு முன்முயற்சி அமைப்பின் இயக்குநர் டாக்டர் சபீனா அல்கைர் மற்றும் நித்தி ஆயோக்கின் திட்ட இயக்குநர் திரு. ராஜீப் குமார் சென் ஆகியோர் தொடக்க அமர்வில் உரையாற்றினர். வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளின் துல்லியமான செயல்பாடுகள், வலுவான நிர்வாகம் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாக பன்முகப் பரிமாண வறுமைக் குறியீட்டின் அவசியம் குறித்து இதில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களில் இலக்கு நிர்ணயிப்பதற்காக மாநிலங்கள் தற்போது இந்தத் தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்தும், வறுமை தொடர்பானக் குறியீடுகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் குழு விவாதம் நடைபெற்றது. திட்ட வடிவமைப்பு மற்றும் விநியோகத்தில் மிகவும் பயனுள்ள, தரவு சார்ந்த முடிவெடுப்பது குறித்த முக்கிய தகவல்களை குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். கணக்கெடுப்புகளுக்கான கால அளவைக் குறைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள தரவுகளை சரி செய்தல் போன்ற பணிகளும் இதில் அடங்கும். தமிழ்நாட்டில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உத்தரப் பிரதேசத்தின் சம்பவ் அபியான், ஆந்திரப் பிரதேசத்தின் பூஜ்ஜிய வறுமை - பி4 மற்றும் ஒடிசாவின் சமூகப் பாதுகாப்பு விநியோகத் தளம் போன்ற பல்வேறு முயற்சிகளை யோசித்து செயல்படுத்துவதில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவில் பன்முகப் பரிமாணத்துடன் கூடிய வறுமையின் தேசிய மற்றும் எந்தவொரு தனி நபரையும் விட்டு விடாமல் மேற்கொள்ளப்படும் பகுப்பாய்வு ஆகியவற்றின் தொழில்நுட்ப முறைகளை மையமாகக் கொண்ட அமர்வும் இந்தப் பயிலரங்கில் இடம்பெற்றது.
***
AD/SV/SH
(Release ID: 2165465)
Visitor Counter : 2