மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க மாநாடு - “நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்த விவாதம்

Posted On: 10 SEP 2025 5:08PM by PIB Chennai

காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்தியத் தலைவரும்மக்களவைத் தலைவருமான திரு ஓம் பிர்லாநாளை (செப்டம்பர் 11, 2025) பெங்களூரு சட்டப்பேரவையில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்க இந்திய பிராந்தியத்தின் 11-வது மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில்நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும்அவர்களது விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்  நடைபெறுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில்கர்நாடக மாநில முதலமைச்சர் திரு சித்தராமையாமாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்புரையாற்றுவார்கள். இதில் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சட்டமன்ற திரு யு.டி. காதர் ஃபரீத் வரவேற்பு உரையாற்றுகிறார். அதே நேரத்தில் காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் கர்நாடக மாநிலக் கிளையின் செயலாளர் நன்றியுரையாற்றுகிறார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க விழாவில்மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கர்நாடக மாநில ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் மற்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோர் டிசம்பர் 13, 2025 அன்று நடைபெறவுள்ள நிறைவுநாள் நிகழ்ச்சியில் உரையாற்றுவார்கள்.

செப்டம்பர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டைகாமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் கர்நாடக கிளையின் சார்பில்அம்மாநில சட்டப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள கண்காட்சியைமக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைக்கிறார்.

வெளிநாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்றங்களின் தலைவர்கள்காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக  அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில்சட்டப்பேரவைத் தலைவர்கள்துணைத் தலைவர்கள்மாநில / யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு நாடாளுமன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். நாடாளுமன்றம்மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும்கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும்சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும்இந்த மாநாடு உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

AD/SV/AG/SH

 


(Release ID: 2165433) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Bengali , Kannada