வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதித் துறைக்கு பெரும் ஊக்கம்: 102 புதிய மீன்வள நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 09 SEP 2025 5:48PM by PIB Chennai

இந்தியாவின் கடல் உணவுத் தொழிலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக புதிதாக 102  இந்திய மீன்வள நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க விரிவாக்கம் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உறுதி அமைப்புகளில் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும் இந்திய கடல் உணவுப் பொருட்களுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய முயற்சியைக் குறிக்கிறது.

 

ஐரோப்பிய ஒன்றியத்திலும் புது தில்லியிலும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற தொடர் கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவு  எட்டப்பட்டுள்ளது.  இதன் விளைவாக ஏற்றுமதி ஆய்வு கவுன்சில்  அமல்படுத்தும் இந்தியாவின் வலுவான அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டு வழிமுறைகள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இந்திய கடல் உணவு ஏற்றுமதிகள், கடுமையான சர்வதேச தரநிலைகளை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் வகுத்த கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்வது, இந்த அறிவிப்பிற்கு முக்கிய காரணம்.

 

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165005

***

 

(Release ID: 2165005)

AD/BR/KR


(रिलीज़ आईडी: 2165167) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Kannada