சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தூய்மையான நகரங்களுக்கு விருதுகளை வழங்கினார்
Posted On:
09 SEP 2025 4:21PM by PIB Chennai
சுத்தமான காற்று மதிப்பீட்டு விருதுகள் மற்றும் ஈரநில நகரங்கள் அங்கீகார விழா 2025 இன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் 130 நகரங்களில் நடத்தப்பட்ட மதிப்பீட்டின் கீழ் சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தேசிய தூய்மையான காற்று திட்டம் 2020 ஆகஸ்ட் 15 அன்று நமது பிரதமரின் செய்தியுடன் தொடங்கியது. ஒருங்கிணைந்த மற்றும் நவீன அணுகுமுறை மூலம் மாசுபாட்டைக் குறைக்க 100 நகரங்களில் நடவடிக்கை எடுக்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
தூய்மையான காற்று என்ற நோக்கத்தை முன்னெடுப்பதில் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தியதற்காக, நகரங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் விருதுகளை வழங்கினார்.
காற்றின் தரத்தை மேம்படுத்த விரைவான நடவடிக்கைகளை எடுக்க நகரங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக 130 நகரங்களுக்கு ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பிரிவு 1-ல், இந்தூர் 200-க்கு 200 மதிப்பெண்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது. ரூ. 1.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தூர் கடந்த ஆண்டு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது, மேலும் 120 மின்சார பேருந்துகள் மற்றும் 150 இயற்கை வாயு பேருந்துகள் மூலம் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்துள்ளது.
ஜபல்பூர் 200-க்கு 199 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. ரூ. 1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் 11 மெகாவாட் கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலையை அமைத்து பசுமையை உருவாக்கியுள்ளது.
ஆக்ரா மற்றும் சூரத் 200-க்கு 196 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்தன. ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆக்ரா மரபுவழி கழிவுகள் கொட்டும் இடத்தை சரிசெய்து மியாவாகி தோட்டத்தை மேற்கொண்டுள்ளது. சூரத் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வரிச் சலுகைகளை வழங்க மின்சாரக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.
3 முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட பிரிவு 2-ல், அமராவதி 200-க்கு 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. ஜான்சி மற்றும் மொராதாபாத் 200-க்கு 198.5 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தன. ஆல்வார் 200-க்கு 197.6 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தைப் பிடித்தது.
இந்த விருதுகளை அந்தந்த நகரங்களின் மேயர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் பெற்றனர்.
மொராதாபாத் மற்றும் ஆக்ராவை 3 முறை வென்றதற்காகவும்; இந்தூர், ஜபல்பூர், சூரத், ஜான்சி, தேவாஸ், பர்வானூ மற்றும் அங்குல் ஆகியவற்றை 2 முறை வென்றதற்காகவும்; அல்வார் நகரம் புதிய வெற்றியாளராக இருப்பதற்காகவும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
***
SS/PKV/SH
(Release ID: 2165103)
Visitor Counter : 2