தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
எஸ்எம்எஸ் பிரச்சாரம் நிராகரிப்பு தொடர்பான ஊடகச் செய்திகள் குறித்து விளக்கம்
Posted On:
08 SEP 2025 2:36PM by PIB Chennai
மகாராஷ்டிராவில் ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரம் தொடர்பாக தனது ஊழியர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான விண்ணப்பத்தை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் நிராகரித்ததாகக் கூறப்படும் சில ஊடகச் செய்திகள், கவனத்திற்கு வந்துள்ளன. தனிநபர்களின் எஸ்எம்எஸ் பிரச்சாரங்களை அனுமதிப்பது அல்லது நிராகரிப்பதில் தனது பங்கினை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. எஸ்எம்எஸ் அனுமதி அல்லது நிராகரிப்பு தொலைத்தொடர்புச் சேவை வழங்குபவரால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
தனிநபர் எஸ்எம்எஸ் பிரச்சாரத்தை ஏற்பது அல்லது நிராகரிப்பதில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தொடர்பு ஏதுமில்லை. இந்தப் பணிகள் தொலைத் தகவல் வணிகத் தொடர்பு, வாடிக்கையாளர் முன்னுரிமை விதிகள், 2018-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்பின் கீழ், தொலைத்தொடர்புச் சேவை வழங்குபவரால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊடகங்களில் வெளியான குறிப்பிட்ட சம்பவத்தில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை அது உறுதிபட தெரிவித்துள்ளது.
***
SS/SMB/KPG/KR
(Release ID: 2164784)
Visitor Counter : 2