கனரகத் தொழில்கள் அமைச்சகம்
புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்களால் கனரக தொழில்துறையில் ஏற்படும் பயன்
Posted On:
08 SEP 2025 1:56PM by PIB Chennai
புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் கனரக தொழில்துறை உற்பத்தி சாதனங்களில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும். மோட்டார் வாகனங்களின் உதிரிப் பாகங்களுக்கான வரிவிகிதங்கள் குறையும். இதனால் மோட்டார் வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தியாளர்களுக்கு உதவியாக இருக்கும். வழங்கல் தொடரில் பெரும் பங்கு வகிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு இது பயன் தரும். முறைசாரா பணிகளில், ஓட்டுநர்கள், பழுதுபார்ப்போர் போன்றோரும் பயனடைவார்கள்.
கனரக தொழில்துறை மூலம், உற்பத்தி செய்யப்படும் இருசக்கர மோட்டார் வாகனங்கள் (350 சிசி வரை), சிறிய வகைக் கார்கள், 10 நபர்கள் வரை இருக்கை வசதி கொண்ட சிறு பேருந்துகள், வணிக ரீதியான சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர்களுக்கான (1800 சிசி வரை) ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர்களுக்கான உதிரிப்பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெரிய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி (செஸ் வரி இல்லாமல்) 40 சதவீதமாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164587
-----
SS/SMB/KPG/KR
(Release ID: 2164689)
Visitor Counter : 2