பாதுகாப்பு அமைச்சகம்
பப்புவா நியூ கினியாவிற்கு ஐஎன்எஸ் கத்மத் பயணம்
प्रविष्टि तिथि:
07 SEP 2025 6:54PM by PIB Chennai
பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக் கப்பலான கத்மத்-ல் புறப்பட்ட இந்திய கடற்படை இசைக்குழு, போர்ட் மோர்ஸ்பியில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்றது.
இந்த நிகழ்வில் பல நாடுகளைச் சேர்ந்த இசைக்குழுக்கள் ஒன்றிணைந்து, உலகளாவிய இசை மூலம் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியத்தை அடையாளப்படுத்தின.
இந்திய கடற்படை இசைக்குழு தற்காப்பு இசை மற்றும் இந்திய மெல்லிசைகளின் தொகுப்பை வழங்கியது. இதற்கு, பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டு கிடைத்தது. அவர்களின் எழுச்சியூட்டும் நிகழ்ச்சி இந்தியாவின் துடிப்பான கலாச்சார நெறிமுறைகளை வெளிப்படுத்தியது. பசிபிக் நாடுகளுடனான நீண்டகால கடல்சார் பிணைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
ஐஎன்எஸ் கத்மத் குழுவினர் போமனா போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பல இந்திய வீரர்கள் உட்பட இரண்டாம் உலகப் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை கௌரவித்தனர்.
***
(Release ID: 2164515)
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2164527)
आगंतुक पटल : 12