அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தொழில் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டமைக்க மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
06 SEP 2025 7:50PM by PIB Chennai
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி, வலிமையான தொழில்துறை கூட்டணியின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் “புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்த பொருளாதாரத்தை” அதிகளவில் சார்ந்திருக்கும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுக்கு உகந்த சூழலியலை அரசு உருவாக்கியிருக்கிறது என்று கூறிய அமைச்சர், எனினும் புத்தொழில் நிறுவனங்களை நிலைநிறுத்துவதற்கு, தொழில்துறையுடன் விரைவான மற்றும் போதுமான செயல்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தினார். “தொழில்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தான், தொழில்துறையுடன் இணைந்த புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை நாங்கள் ஊக்குவித்தோம்”, என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆலோசனைகளும் ஆராய்ச்சிகளும் கல்வி நிறுவனங்களில் இருந்து உருவானபோதும், அவற்றின் நீண்ட கால வெற்றி, நிதி ஆதரவு, சந்தை வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்கும் தொழில்துறையுடன் கூடிய கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்புகளை சார்ந்திருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் புத்தொழில் நிறுவன சூழலியல் மெட்ரோ நகரங்களுக்கும் தொழில்நுட்ப முனையங்களுக்கும் மட்டுமே இனி உரியதாக இருக்காது என்றும், சிறிய நகரங்களும், பல்வேறு துறைகளும் புதிய துறைகளில் தங்கள் பங்களிப்பை கணிசமாக அதிகரித்து வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். இது, வளர்ச்சிக்காக புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் முன்னேற விரும்பும் இந்தியாவிற்கான அறிகுறியாகும், என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164402
****
(Release ID: 2164402)
AD/BR/SG
(Release ID: 2164484)
Visitor Counter : 2