பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை, எம்எஸ்எம்இ நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி விரிவாக்கத்திற்கான ஊக்கியாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

Posted On: 04 SEP 2025 8:51PM by PIB Chennai

வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார விரிவுபடுத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) அதிகாரமளிக்கும் அரசின் நிலையான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடன் அணுகல், சந்தை இணைப்புகளின் விரிவாக்கம், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் இயக்க சுமைகளைக் குறைத்தல் முதலியவற்றுக்காக அரசு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தப் பயணத்தில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்த முன்முயற்சி, குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு ஷியாம் சேகர் வெளியிட்ட பதிவிற்கு பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது:

 “நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் எம்எஸ்எம்இ நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளர்ச்சியை இயக்குகின்றன.

எளிதான கடன் வசதி முதல் விரிவுபடுத்தப்பட்ட சந்தை அணுகல் வரை, ஒவ்வொரு சீர்திருத்தமும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றது.

சமீபத்திய ஜிஎஸ்டி மாற்றங்கள், விகிதங்களை ஆராய்ந்து, இணக்கத்தை எளிதாக்குதல் மற்றும் இந்தியா முழுவதும் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த உத்வேகத்தை உருவாக்குகின்றன.

#NextGenGST”

*****

(Release ID: 2163937)
AD/BR/SG

 


(Release ID: 2164130) Visitor Counter : 3