குடியரசுத் தலைவர் செயலகம்
ஓணம் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2025 6:02PM by PIB Chennai
ஓணம் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
“ஓணம் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கேரளாவில் வளமான பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இப்பண்டிகை தனித்துவமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இப்பண்டிகை கலாச்சார, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தத் தருணத்தில் நமது கலாச்சார பன்முகத்தன்மைக்கு மதிப்பளிப்பதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நாம் உறுதியேற்போம்.”
***
(Release ID: 2163782)
SS/PLM/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163859)
வருகையாளர் எண்ணிக்கை : 28