பாதுகாப்பு அமைச்சகம்
டிஆர்டிஓ மூன்று மேம்பட்ட தொழில்நுட்பங்களை தொழில்துறைப் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2025 12:44PM by PIB Chennai
ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் (டிஎம்ஆர்எல்) மூன்று மேம்பட்ட தொழில்நுட்பங்களை தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளது. 2025 ஆகஸ்ட் 30 அன்று ஹைதராபாத்தில் உள்ள டிஎம்ஆர்எல் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டுத் துறையின் செயலாளரும் டிஆர்டிஓ-வின் தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உரிம ஒப்பந்த (எல்ஏடிஓடி) ஆவணங்களை தொழில்துறையினரிடம் ஒப்படைத்தார்.
பகிர்ந்து கொள்ளப்படும் தொழில்நுட்பங்கள்:
- உயர்தர ரேடோம்களை (முக்கியமான ஏவுகணை உணரிகளுக்கான பாதுகாப்பு உறைகள்) உற்பத்தி செய்ய ஜெகதீஷ்பூரில் உள்ள பிஹெச்இஎல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்றம்
- பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான டிஎம்ஆர்-1700 எஃகு தாள்கள், தகடுகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் ஜேஎஸ்பிஎல் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.
- கடற்படை கப்பல்களை கட்டமைக்க வலுவான எஃகு வழங்கும், பிலாயில் உள்ள பிஎஸ்பி ஆலைக்கு டிஎம்ஆர் 249ஏ ஹெச்எஸ்எல்ஏ எஃகு தகடுகள் தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்ப பரிமாற்றம், உத்திசார் பயன்பாடுகளுக்கான உள்நாட்டு பொருட்கள் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=21636321
***
SS/PLM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2163693)
வருகையாளர் எண்ணிக்கை : 15