மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்புகளின் முதல் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்

Posted On: 02 SEP 2025 8:02PM by PIB Chennai

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்புகளின் முதல் தொகுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வழங்கியதன் மூலம் இந்தியாவின் குறைகடத்தி (செமிகண்டக்டர்) பயணம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்திய குறைகடத்தி இயக்கத்திற்கு வெறும் மூன்றரை ஆண்டுகளில் உற்பத்திக்கு ஒப்புதல் கிடைத்ததற்காக திரு அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தை அடைந்தது முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்புகளின் முதலாவது தொகுப்புடன் வளர்ந்து வரும் குறைகடத்தி துறை வரை இந்தியா நிலைத்தன்மையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என்று கூறினார்.

அறிவுசார் சொத்துரிமைகளுக்கு மதிப்பளித்து, விநியோகச் சங்கிலி வளர்ச்சிக்கு ஆதரவளித்து,  உலகளாவிய கூட்டாளர்களுடன் இணை வளர்ச்சி மாதிரிகளை மேம்படுத்துதல் மூலம் இந்தியாவின் குறைகடத்தி இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியா எப்போதும் உலக நாடுகளை கூட்டாளர்களாக கொண்டு பரஸ்பர வளர்ச்சியை அடைவதாகவும் குறிப்பிட்டார். இந்த நம்பிக்கை சூழல் உலகளாவிய மதிப்பில் இந்தியாவின் வலிமையான பயன்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்தார்.

செமிகான் இந்தியா 2025-ன் போது 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள், நாட்டின் தன்னிறைவு பெற்ற மற்றும் எதிர்காலத்திற்கும் தயாரான குறைகடத்தி அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தங்கள் உற்பத்தி வளர்ச்சியை மேம்படுத்துதல், சேவைத் திறன்களை விரிவாக்குதல், திறன் மேம்பாட்டுத் துறையை  வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. நாட்டின் எதிர்கால செமிகண்டக்டர் சூழலையும் தற்சார்பையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

***

(Release ID: 2163184)

SS/IR/KPG/KR


(Release ID: 2163618) Visitor Counter : 2