வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் 99 ஆவது திட்டக் குழுக் கூட்டம்: முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு
प्रविष्टि तिथि:
03 SEP 2025 6:34PM by PIB Chennai
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக, பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ், கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 99-வது கூட்டம் இன்று நடைபெற்றது.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு பங்கஜ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் ஒரு திட்டம், ரயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்கள் உட்பட நான்கு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன . ஒருங்கிணைந்த பன்முக உள்கட்டமைப்பு, பொருளாதார மற்றும் சமூக முனைகளுக்கான கடைசி மைல் இணைப்பு மற்றும் 'முழுமையான அரசு' அணுகுமுறை உள்ளிட்ட பிரதமரின் விரைவுசக்தி கொள்கைகளுக்கு திட்டங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்முயற்சிகள் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை ஊக்குவிக்கும் என்றும், பயண நேரத்தைக் குறைக்கும் என்றும், திட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் சமூகப் பொருளாதார பலன்களை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163426
***
(Release ID: 2163426)
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2163605)
आगंतुक पटल : 13