நிலக்கரி அமைச்சகம்
நாட்டில் உள்ள நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களின் சிறப்பான செயல்பாட்டுக்கான நட்சத்திர அந்தஸ்து விருதுகள் வழங்கப்படவுள்ளன
Posted On:
03 SEP 2025 11:24AM by PIB Chennai
நாடு முழுவதிலும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாடு ஆகிய அம்சங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாளை (04 செப்டம்பர் 2025) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
சுரங்க நடவடிக்கைகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலும் தொழில்துறை தர நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், நீடித்த வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும் நிலக்கரி சுரங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி, மத்திய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்துறை பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163239
***
SS/SV/AG/KR
(Release ID: 2163265)
Visitor Counter : 2