சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தகுதி வாய்ந்த எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் தேசிய தகுதி விருதுகள் வழங்கப்பட்டன
प्रविष्टि तिथि:
02 SEP 2025 4:10PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, இன்று புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் தேசிய தகுதி விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது. 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற பட்டியலின (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்களையும், அங்கீகரிக்கப்பட்ட மாநில/மத்திய வாரியங்கள் மற்றும் கவுன்சில்களால் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்ற பட்டியலின பிரிவைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்களையும் பாராட்டுவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரும், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வீரேந்திர குமார் கலந்து கொண்டார். கல்வி மற்றும் சமூக நீதித் துறையில் பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் பங்களிப்பை அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும், கல்வி, உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பட்டியலின, பட்டியல் பழங்குடியின மற்றும் பிற பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163060
***
(Release ID: 2163060)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2163212)
आगंतुक पटल : 40