ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்ப வலிமை மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி தில்லியில் நடைபெறுகிறது

Posted On: 02 SEP 2025 4:20PM by PIB Chennai

இந்தியாவின் மருத்துவத் தொழில்நுட்ப வலிமை மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்த செப்டம்பர் 4 முதல் 6 வரை தில்லியில் இந்திய மருத்துவத் தொழில்நுட்ப  கண்காட்சி 2025 நடத்தப்பட உள்ளது. மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், மருத்துவ சாதனங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் கண்காட்சியை மத்திய மருந்தியல் துறை பாரத் மண்டபத்தில் நடத்த உள்ளது.

இந்தக் கண்காட்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, தொழில் வர்த்தகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா ஆகியோர் தொடங்கி வைப்பார்கள்.

இந்தியா : உலகளாவிய மருத்துவத் தொழில்நுட்ப உற்பத்தியின் மையம், குறைந்த செலவில் துல்லியமான பொறியியல் என்ற மையப் பொருளில் இந்தக் கண்காட்சி நடைபெறும். 30-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 150 கொள்முதல் செய்வோர், இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்ப சூழல் அமைப்பில் உலகளாவிய பங்குதாரர்கள், முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இது வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163065

***

SS/SMB/KPG/DL


(Release ID: 2163173) Visitor Counter : 3