குடியரசுத் தலைவர் செயலகம்
நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித்துறை முக்கியப் பங்காற்றுகிறது : குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
Posted On:
02 SEP 2025 1:55PM by PIB Chennai
தமிழ்நாட்டில் சென்னையில் இன்று சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உலகில் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரம் உள்ளதாகவும், இந்த வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.
மாறிவரும் பொருளாதார சூழலில், மக்களின் விருப்பங்கள் பெருமளவில் விரிவடைந்துள்ளதாகவும், நிதி பரிவர்த்தனைகளுக்கு அப்பால் வங்கிகளின் பங்களிப்பு விரிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். வங்கிகள் செல்வத்தின் பாதுகாவலர்கள் மட்டுமின்றி, தற்போது அவை பல்வேறு நிதி சேவைகளை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அவை உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கும் கருவியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கமாகும். அதாவது ஒவ்வொரு குடிமகனும் குறைந்த கட்டணத்தில் நிதி சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதாகும் என்று குடியரசு தலைவர் கூறினார். நிதி உள்ளடக்கத் துறையில் சிட்டி யூனியன் வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று குறிப்பிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், விளிம்புநிலை சமூகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பயனாளர்களுக்கு உகந்த மொபைல் செயலிகள், நுண் கடன்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன என்று அவர் கூறினார். பேமண்ட் வங்கிகள், டிஜிட்டல் வேலட் மற்றும் வங்கி ஊழியர்கள் மூலம் நிதி சேவைகள் ஊரகப் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுவதாக குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163016
***
SS/IR/RJ/KR/DL
(Release ID: 2163160)
Visitor Counter : 6