நிலக்கரி அமைச்சகம்
2025 ஆகஸ்ட் மாத நிலக்கரி உற்பத்தி 15.07 மில்லியன் டன்னாக அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
02 SEP 2025 11:46AM by PIB Chennai
நடப்பு நிதியாண்டில் (2025-26) ஆகஸ்ட் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 14.43 மில்லியன் டன்னாகவும், விநியோகம் 15.07 மில்லியன் டன்னாகவும் இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட அதிகமாகும். முன்னதாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி 11.88 சதவீதமாகவும், விநியோகம் 9.12 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இந்த நேர்மறையான போக்கு சுரங்கத்துறையில் செயல்பாட்டுத்திறன் மேம்பட்டுள்ளதையும், திறன்மிக்க பயன்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியை இது எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162972
***
AD/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2163011)
आगंतुक पटल : 15