தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய மொபைல் மாநாடு வாய்ப்புகளுக்கான தளமாகும்: மத்திய அமைச்சர் திரு ஜோதிர்ராதித்ய சிந்தியா
Posted On:
01 SEP 2025 2:49PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய செயலி மாணவர்கள் முதல் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் வரை அனைவருக்கும் எதிர்கால டிஜிட்டல் புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் தேவையான அனைத்து விஷயங்களையும் கொண்டு சேர்க்கக்கூடிய சாதனமாக திகழும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிர்ராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய கலந்துரையாடலுக்கான மொபைல் செயலியை இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு வாய்ப்புகளுக்கான தளமாக அமையும் என்று கூறினார்.
இதில் தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி, தொலைத் தொடர்புத்துறை செயலர் டாக்டர் நீரஜ் மித்தல், இந்திய மொபைல் சேவை வழங்குநர் சங்கத்தின் தலைமை இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் எஸ் பி கோச்சா, இந்திய மொபைல் காங்கிரஸ் தலைமைச் செயல் அதிகாரி திரு பி ராமகிருஷ்ணா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுதில்லியில் துவராகாவில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு வரும் அக்டோபர் 8-ம் தேதி முதல் 11 –ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162637
***
SS/SV/AG/KR
(Release ID: 2162772)
Visitor Counter : 2