நிதி அமைச்சகம்
தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரியாக திருமதி டி சி ஏ கல்யாணி பொறுப்பேற்றுக் கொண்டார்
Posted On:
01 SEP 2025 1:44PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையில் புதிய தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரியாக திருமதி டி சி ஏ கல்யாணி பொறுப்பேற்றுக் கொண்டார்.
1991-ம் ஆண்டு இந்திய குடிமை கணக்கியல் சேவைகள் துறை அதிகாரியாக அவர் பணியாற்றியுள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியல் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை சர்வதேச அரசியலும், மேற்கு ஐரோப்பிய படிப்பில் முதுகலை முனைவர் பட்டமும் வென்றவர். மேலும் அவர் பொது நிதி மேலாண்மை, கணக்கியல், நிர்வாகம் மற்றும் ஆளுமைகளில் கூடுதல் நிபுணத்துவமும் பெற்றவர் ஆவார்.
நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் உரக்கொள்முதலுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசிடமிருந்து பெறுவதற்கு முன் முயற்சி எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
எம்டிஎன்எல் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் நடைமுறைகள் வழியாக டிஜிட்டல் மாற்றத்திற்கு முன்னிலை வகித்த அவர் இந்திய உரக்கழகம் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதன்மை தலைமை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162613
***
SS/SV/AG/KR
(Release ID: 2162666)
Visitor Counter : 2