இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு தின கொண்டாட்டங்கள் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மாறியுள்ளன - மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா
Posted On:
31 AUG 2025 3:47PM by PIB Chennai
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் பங்கேற்கும் உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்) பேரணி இயக்கத்தின் இந்த வார நிகழ்வு தேசிய விளையாட்டு தின சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. தில்லியில் இன்று (31.08.2025) காலை மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இந்தக் கொண்டாட்டங்களுக்கு தலைமை வகித்தார். ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த்தின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, மூன்று நாள் அகில இந்திய விளையாட்டு தின கொண்டாட்டங்களின் நிறைவு நாளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மிதிவண்டிப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், "மூன்று நாள் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டங்கள் உண்மையான மக்கள் இயக்கமாக மாறியுள்ளன என்றார். கிராமப்புற விளையாட்டு மைதானங்கள் முதல் தேசிய அளவிலான விளையாட்டு அரங்கங்கள் வரை, கிட்டத்தட்ட 30 கோடி இந்தியர்கள் விளையாட்டு, உடற்பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்று இந்த தினத்தை கொண்டாடியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்த பங்கேற்பு இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு கலாச்சாரத்தையும், உடற்பயிற்சியை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கான நமது கூட்டு உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
இதற்கிடையில், நாடு தழுவிய அளவில் இந்த முயற்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய அளவில் நடைபெற்றன. 700 மாவட்டங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இடங்களில், விளையாட்டுகள், மிதிவண்டி பேரணிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் 30 கோடி பேர் பங்கேற்றனர்.
இமயமலைப் பள்ளத்தாக்குகள் முதல் கடலோர நகரங்கள் வரை, பரபரப்பான பெருநகரங்கள் முதல் கிராமப்புற மையப்பகுதிகள் வரை, மூன்று நாள் தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இதில் பிரபல விளையாட்டு வீரர்கள், மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து பங்கேற்றனர். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, குருக்ஷேத்திரத்தில் 2500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டார். தெலங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானாவில் 1000- க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுடன் மிதிவண்டிப் பேரணியில் பங்கேற்றார்.
மும்பையில் உள்ள போரிவலி தேசிய பூங்காவில் நடைபெற்ற சிறப்பு மிதிவண்டிப் பேரணியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே கலந்து கொண்டார்.
*****
(Release ID: 2162444)
AD/PLM/SG
(Release ID: 2162485)
Visitor Counter : 2