தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஐசிடி மும்பை மற்றும் வேவ்எக்ஸ் புத்தொழில் நிறுவன மேம்பாட்டுத் தளம் ஆகியவை ஏவிஜிசி-எக்ஸ்ஆர் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மீடியா டெக் இன்குபேட்டரை அறிமுகப்படுத்துகின்றன
Posted On:
30 AUG 2025 7:48PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தொழில் நிறுவன மேம்பாட்டுத் தளமான வேவ்எக்ஸ் (WaveX), இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IICT) இணைந்து, வேகமாக வளர்ந்து வரும் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அதிக திறன் கொண்ட முயற்சிகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக ஊடக தொழில்நுட்ப புத்தொழில் நிறுவன இன்குபேட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த இன்குபேட்டர் ஏவிஜிசி-எக்ஸ்ஆர் (AVGC-XR) துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆடியோ, விஷுவல், காமிக்ஸ், கேமிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக ஊக்குவிப்பு சூழலியலை வழங்கும். இந்த முயற்சி, அரசு ஊடக அலகு கூட்டாண்மைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதல், அதிநவீன உள்கட்டமைப்பு, உத்திசார் ஆலோசனை மற்றும் எதார்த்த சோதனை வாய்ப்புகளை வழங்கும். மேலும் புத்தொழில் நிறுவனங்களை திறம்பட அளவிடவும் வணிகமயமாக்கவும் உதவும்.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் காலாண்டு மதிப்பாய்வுகளுடன் திட்டத்தின் நிர்வாகத்தை வேவ்எக்ஸ் மேற்பார்வையிடும். ஐஐசிடி வளாகத்தில் முதல் தொகுதிக்கு மாதத்திற்கு ₹ 8500 + ஜிஎஸ்டி கட்டணத்துடன் 15 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும். முதல் குழுவில் இடம்பெற செப்டம்பர் 7, 2025 வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள புத்தொழில் நிறுவனங்கள் wavex.wavesbazaar.com என்ற இணையதளத்தில் தேவையான விவரங்களை வழங்குவதன் மூலம், இணையவழியில் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2162332
***
(Release ID: 2162332)
AD/BR
(Release ID: 2162418)
Visitor Counter : 3