பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் பொதுத்துறை எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி
Posted On:
30 AUG 2025 12:44PM by PIB Chennai
நாட்டில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பொதுத்துறை எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தில்லி கால்பந்து சங்கம், சுதேவா அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பிஎஸ்பிபி) இன்று (30.08.2025) தில்லயில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார். 2014-ம் ஆண்டுக்குப் பின், இந்தியாவை விளையாட்டில் முன்னணி நாடாக மாற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நிதியுதவி அடிப்படையில் மட்டுமின்றி, ஊட்டச்சத்து, விளையாட்டு அறிவியல், பயிற்சி உள்ளிட்ட முழு சூழல் அமைப்பின் வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் பிஎஸ்பிபி-யின் பங்களிப்பைப் பாராட்டிய அமைச்சர், இது நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு மேம்பாட்டு அமைப்புகளில் ஒன்றாகும் என்றார். இந்த அமைப்பு 19 விளையாட்டுகளில் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது என அவர் கூறினார்.
தேசிய விருது பெற்ற 151 பேர் பிஎஸ்பிபி விளையாட்டு வீரர்களாக உள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இவர்களில் 3 பேர் பத்ம பூஷண், 13 பேர் பத்மஸ்ரீ, 10 பேர் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றுள்ளனர். ஒருவர் துரோணாச்சார்யா விருதினையும், 7 பேர் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் 117 பேர் அர்ஜுனா விருதுகளையும் பெற்றுள்ளதாக திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
***
(Release ID: 2162165)
AD/SMB/PLM/RJ
(Release ID: 2162330)
Visitor Counter : 15