மக்களவை செயலகம்
எஸ்சி/எஸ்டி மக்களுக்கு அதிகாரமளிக்க மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம்: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
Posted On:
30 AUG 2025 5:38PM by PIB Chennai
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு, நலத்திட்டங்கள் கடைசி குடிமகனை, குறிப்பாக ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓஎம் பிர்லா தெரிவித்துள்ளார். இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் உண்மையான பலன்களை அவர்களுக்கு வழங்க முடியும் என்று அவர் கூறினார். புவனேஸ்வரில் நடைபெற்ற ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டின் நிறைவு அமர்வில் இன்று திரு பிர்லா உரையாற்றினார். ஒவ்வொரு மாநில சட்டமன்றமும் ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அர்ப்பணிப்புடன் கூடிய குழுக்களை அமைப்பதன் அவசரத் தேவையையும் அவர் தமது உரையில் அடிக்கோடிட்டுக்காட்டினார்.
ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை வலுப்படுத்தவும், அவை இன்றைய விருப்பங்களுக்கு இசைவாக இருப்பதை உறுதி செய்யவும் இந்தியா பரந்த அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார். பட்ஜெட் ஒதுக்கீடுகளை நுணுக்கமாக ஆராய்வதன் மூலமும், நலத்திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதன் மூலமும், மேம்பாடுகளை பரிந்துரைப்பதன் மூலமும் குழுக்கள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். இந்த விரிவான ஆய்வு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது மட்டுமின்றி, மக்களுக்கு அரசின் பொறுப்புணர்வையும் உறுதி செய்கிறது.
இந்தக் குழுக்களிடமிருந்து வரும் பரிந்துரைகளை விமர்சனங்களாகக் கருதாமல் பாதை திருத்தத்திற்கான ஆக்கபூர்வ வழிகாட்டுதலாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசுகளும் குழுக்களும் இந்த உணர்வில் இணைந்து செயல்படும்போது, முடிவுகள் எப்போதும் நீடித்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். கல்வியும் தொழில்நுட்பமும் ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகாரமளிக்க உந்து சக்தியாக உள்ளன என்று குறிப்பிட்ட அவர், சமூகங்களையும் தேசத்தையும் மேம்படுத்த இவற்றைப் பயன்படுத்த அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2162269
***
AD/SMB/RJ
(Release ID: 2162323)
Visitor Counter : 14