தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஜெய்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காரணமாக உயிரிழந்த பெண்ணின் வழக்கு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
Posted On:
28 AUG 2025 1:44PM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்த பின், அப்பெண்ணுக்கு அளிக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காரணமாக 26 வயது பெண் உயிரிழந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர்கள், மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அதிக அளவிலான ரத்தப்போக்கு, வலி காரணமாக அந்தப் பெண் உயிரிழந்தார். மேலும், அந்தப் பெண்ணைப் சந்திப்பதற்கு குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் சாதாரண பிரிவிலிருந்து அவசரகால பிரிவிற்கு மாற்றவும் அனுமதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கருத்தில் கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் செய்தியில் உண்மை இருக்கும் பட்சத்தில் உயிரிழந்த பெண்ணின் மனித உரிமைகளுக்கு எதிரான சம்பவமாக கருதப்படும் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தச் சம்பவம் குறித்து மாநிலத் தலைமைச் செயலாளர், ஜெய்பூர் காவல் துறை ஆணையர் இரண்டு வாரத்திற்குள் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்யவேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161453
----
AD/SV/KPG/KR
(Release ID: 2161572)
Visitor Counter : 18