பிரதமர் அலுவலகம்
அறுவடைத் திருவிழாவான நுகாய் பண்டிகைக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 AUG 2025 1:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நுகாய் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் ஓய்வில்லாத முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் இந்தப் பண்டிகை திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நுகாய் பண்டிகையை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி நிறைந்த பண்டிகை நமது விவசாயிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை நினைவு கூரும் வகையிலும் நம் அனைவரின் நீடித்த வாழ்விற்கு உறுதுணையாக இருக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நம் அனைவரது வீடுகளிலும் நல்ல ஆரோக்கியம், வளம், மற்றும் மகிழ்ச்சி நிறைய நல்வாழ்த்துகள்.”
நுகாய் வாழ்த்து
***
(Release ID: 2161443)
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2161571)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam