சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் தென் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
26 AUG 2025 6:08PM by PIB Chennai
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தின் தென் பிராந்தியத்தின் மாநில வழிப்படுத்தல் முகமைகளின் ஆய்வுக் கூட்டம் 2025, ஆகஸ்ட் 26 அன்று கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தலைமை தாங்கினார்.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் , சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சுயதொழில் மற்றும் வருவாய் ஈட்டும் முயற்சிகளுக்கு சலுகைக் கடன்களை வழங்குவதன் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதில் பெண்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு குறிப்பிட்ட முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவது அந்தந்த மாநில அரசுகள்/யூனியன் பிரதேச நிர்வாகங்களால் பரிந்துரைக்கப்பட்ட தென் பிராந்தியமாநில வழிப்படுத்தல் முகமைகள் மூலமாகவும், பஞ்சாப் கிராம வங்கி மற்றும் கனரா வங்கி மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, லட்சத்தீவுகள் மற்றும் பங்கேற்கும் பிற நிதி நிறுவனங்களின் வழிப்படுத்தல் முகமைகள் மூலம் பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மாநிலங்கள் 95 சதவீத அரசு திட்டங்களை செயல்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
பங்கேற்பு உரிமை, தகவல் அறியும் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் முக்கிய அங்கங்கள் என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் உட்பட தனது நலனுக்காக வடிவமைக்கப்பட்ட அரசுத் திட்டங்கள் குறித்து அறியும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்றும் கூறினார்.
தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், தகவல்களை ஒரே கிளிக்கில் மதிப்பிட முடியும் என்பதால், சமூக ஊடகங்கள் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். "முன்னர், நாங்கள் வேலை தேடுபவர்களைப் பற்றி மட்டுமே பேசி வந்தோம், ஆனால் இப்போது வேலை வழங்குபவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
சிறுபான்மை சமூகங்களின் முழுமையான வளர்ச்சிக்கான மத்திய திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்த முயற்சிகள் 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160954
***
(Release ID: 2160954)
AD/SMB/RB/DL
(Release ID: 2161236)
Visitor Counter : 14