பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மிசோரம், ஒடிசா, திரிபுராவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த முதல் தவணை மானியமாக ரூ. 284 கோடி விடுவிப்பு
Posted On:
26 AUG 2025 12:49PM by PIB Chennai
2025–26 நிதியாண்டில் மூன்று மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதி ஆணையத்தின் மானியங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2023–24 மானியங்களின் ஒரு பகுதியாக மிசோரம் 827 தகுதியுள்ள கிராம சபைகளுக்கு ரூ.14.2761 கோடியைப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் ஒடிசா 6,085 தகுதியுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் 63 தகுதியுள்ள தொகுதி பஞ்சாயத்துகளுக்கும் ரூ.240.8149 கோடியைப் பெற்றுள்ளது. திரிபுராவுக்கு 2025–26 நிதியாண்டின் முதல் தவணை இலவச மானியங்களின் ஒரு பகுதியாக, 29.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள 606 கிராம பஞ்சாயத்துகள், தகுதியுள்ள 35 தொகுதி பஞ்சாயத்துகள், தகுதியுள்ள 8 மாவட்ட சபைகள் மற்றும் அனைத்து 587 கிராமக் குழுக்கள் மற்றும் மாநிலத்தின் 40 தகுதியுள்ள தொகுதி ஆலோசனைக் குழுக்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு 15-வது நிதி ஆணையம் மானியங்களை வெளியிட மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் மூலம் மாநிலங்களுக்கு பரிந்துரைக்கிறது. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாக பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பளம் மற்றும் பிற நிறுவனச் செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது (29) பிரிவுகளின் கீழ், பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலையை பராமரித்தல், வீட்டுக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல், குறிப்பாக மனித கழிவுகளை நிர்வகித்தல், குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி செய்தல் போன்ற அடிப்படை சேவைகளுக்குப் இந்த நிதியைப் பயன்படுத்தப்படலாம்.
***
(Release ID: 2160811)
AD/PKV/SG
(Release ID: 2160890)