பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் பாதுகாப்பு நம் ஒவ்வொருவரின் கடமையாகும்; பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 25 AUG 2025 2:33PM by PIB Chennai

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆயுதப்படையினருக்கு முழு ஆதரவளித்தது, நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்புணர்வை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு நிறுவனத்தை தொடங்கிவைத்து உரையாற்றினார். நாடு இக்கட்டான தருணங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் மக்கள் குறிப்பாக இளையோர் அரப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து தங்களது கடமைகளை ஆற்றி வலிமைப்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இந்தியப் பாதுகாப்புப் படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்திய பதிலடிக்கு இளைஞர்கள் ஆயுதப் படையினருக்கு ஆதரவளித்தது. அவர்களது மன உறுதியை எடுத்துக்காட்டுகிறது என்றார். இந்தியாவின் பதில் நடவடிக்கை இலக்கை நோக்கிய துல்லிய தாக்குதலாக அமைந்தது என்றும் அவர் கூறினார்.  சாதி மற்றும் மதம் அடிப்படையிலான பாகுபாடுகளை இந்தியா ஒருபோதும் அனுமதித்தது இல்லை என்று அவர் கூறினார். பஹல்காமில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு இந்திய ஆயுதப் படையினர் பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கி அழித்தது புதிய இந்தியாவின் அடையாளமாகத் திகழ்வதாக அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2160510

***

AD/SV/KPG/RJ


(Release ID: 2160568)