பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தாய்லாந்தில் நடைபெறவுள்ள பாதுகாப்பு படைத் தளபதிகள் மாநாட்டில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைத் தளபதி பங்கேற்கவுள்ளார்

Posted On: 25 AUG 2025 11:22AM by PIB Chennai

தாய்லாந்தில் 2025 ஆகஸ்ட் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள பாதுகாப்பு படைத் தளபதிகள் மாநாட்டில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைத் தளபதி ஏர் மார்ஷல் அஷூதோஷ் தீக்ஷித் பங்கேற்கவுள்ளார். இம்மாநாட்டை அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்ட் மற்றும் தாய்லாந்தின் ராயல் பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள், ஒத்துழைப்பு கட்டமைப்புகள், ராணுவங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த நாடுகளில் பாதுகாப்பு படைத் தளபதிகளை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும். கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, கணினி திறன், மனிதநேய உதவி, பேரிடர் நிவாரணம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மையை மேம்படச் செய்தல் ஆகியவற்றில் 2025-ம் ஆண்டு மாநாடு கவனம் செலுத்துகிறது.

பாதுகாப்புத் தொடர்பான பொதுவான கவலைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட கூட்டுத் தயார்நிலை, செயல்படுத்தல் மற்றும் உத்திசார்ந்த கூட்டாண்மைகளை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பாதுகாப்பு படைத் தளபதிகளுடன் ஏர் மார்ஷல் அஷூதோஷ் தீக்ஷித் பரிமாறிக் கொள்வார். பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை, விதிகள் அடிப்படையிலான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படச் செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இப்பயணம் சுட்டிக் காட்டுகிறது.   

***

 

(Release ID:  2160447 )

AD/IR/SG/RJ


(Release ID: 2160512)