தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன
Posted On:
20 AUG 2025 5:26PM by PIB Chennai
2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று இந்தத் தகவலைத் தெரிவித்த அவர், இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் அலைவரிசைகளும், 320 கல்வி அலைவரிசைகளும் அடங்கும் என்று கூறினார். எஃப்எம் கோல்டு, ரெயின்போ, விவித் பாரதி உட்பட 48 ஆகாசவாணி அலைவரிசைகளும் டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
2024-ல் “வேவ்ஸ்” என்ற பலவகை டிஜிட்டல் ஓடிடி தளத்தை பிரசார் பாரதி தொடங்கியுள்ளது என்றும், இது தூர்தர்ஷன், ஆகாசவாணி அலைவரிசைகளை ஒருங்கிணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஊரகப் பகுதிகளில் ஊடகங்கள் சென்றடைவதை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது என்று கூறிய அமைச்சர், 2019-க்குப் பின் 264 சமுதாய வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 6 புதிய தூர்தர்ஷன் அலைவரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 17 அலைவரிசைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்ற தகவல்களையும் தெரிவித்தார். 2020-21 நிதியாண்டு முதல் தற்போது வரை 26 சமுதாய வானொலி நிலையங்களுக்கு நிதியுதவி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158452
***
AD/SMB/AG/DL
(Release ID: 2158551)