நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஜூலை மாதத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கு 100 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது

Posted On: 17 AUG 2025 9:36AM by PIB Chennai

நாட்டில் நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனையாக, பத்து மாநில நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையத்துடன் (NCDRC) இணைந்து,  2025 ஜூலை மாதத்தில் 100 சதவீதத்துக்கும் அதிகமான தீர்வு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் தரவுகளின்படி, நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையம், 122 சதவீத தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு 277 சதவீதத்தையும், ராஜஸ்தான் 214 சதவீதத்தையும், தெலுங்கானா 158 சதவீதத்தையும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் தலா 150 சதவீதத்தையும், மேகாலயா 140 சதவீதத்தையும், கேரளா 122 சதவீதத்தையும், புதுச்சேரி 111 சதவீதத்தையும், சத்தீஸ்கர் 108 சதவீதத்தையும், உத்தர பிரதேசம் 101 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளன.

2025 ஜூலை 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்திற்கான தரவுகளின் பகுப்பாய்வு, நாடு முழுவதும் நுகர்வோர் வழக்குகளின் ஒட்டுமொத்த தீர்வு 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட கணிசமான அளவு அதிகமாகி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இது நுகர்வோர் தகராறுகளை சரியான நேரத்தில் தீர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக் காட்டுகிறது.

-ஜாக்ரிதி தளம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 6, 2025 நிலவரப்படி , அதில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட, பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதன் மூலம் 85,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறை, நாடு முழுவதும் நுகர்வோர் குறை தீர்க்கும் முறையை மாற்றி அமைக்க அடுத்த தலைமுறை, ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக 2025 ஜனவரி 1-ம் தேதி -ஜாக்ரிதியை அறிமுகப்படுத்தியது. அணுகல், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட இந்த தளம், பல்வேறு மரபு சார்ந்த அமைப்புகளை தடையற்ற இடைமுகமாக ஒருங்கிணைத்து, பயனர்களுக்கான அணுகலை எளிதாக்குகிறது.

***

(Release ID: 2157241)

AD/PLM/RJ


(Release ID: 2157271)