கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் 'வியத்தகு நீர்வழிகள்: பயணச் சுற்றுலாவைத் தொடங்குவது' குறித்த மாநாடு நடத்தப்பட உள்ளது

Posted On: 16 AUG 2025 3:23PM by PIB Chennai

மும்பை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் மற்றும் இந்திய துறைமுக அமைப்பு (IPA) ஆகியவற்றுடன் இணைந்து, ஆகஸ்ட் 18-ம் தேதி திங்கட்கிழமை மும்பையில் 'வியத்தகு நீர்வழிகள்: பயணச் சுற்றுலா தொடக்கம்' என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் நீர்வழி பயணச் சுற்றுலாவின் திறனை ஆராய்வதையும், கொள்கை முன்முயற்சிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ச்சிக்கான உத்திகள் குறித்து விவாதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

மத்திய அரசு, சுற்றுலா அமைச்சகம், மகாராஷ்டிரா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய அலுவலர்களின்  விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் உரைகள் ஆகியவை இந்த மாநாட்டில் இடம்பெறும். நீர்வழி பயணச் சுற்றுலா மேம்பாட்டிற்கான உத்திசார்ந்த நோக்கு மற்றும் கொள்கை முன்னெடுப்பு, வளர்ச்சிக்கான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாக, வளர்ச்சி, கலாச்சார ஒருங்கிணைப்பு, கடலோர பயணத்திட்ட வடிவமைப்பு, பயண முனையத்திற்கான அதிசிறந்த நடைமுறைகள், பொலிவுறு முனைய செயல்பாடுகள் மற்றும் பசுமைத் துறைமுக உத்திகள் ஆகியவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய தலைப்புகள்.

 

இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் (NAVIC செல் 4) விளக்கக்காட்சி மூலம் சுற்றுலா மற்றும் படகுத்துறையில் ஏற்பட்டுள்ள சாதனைகளையும் சீர்திருத்தங்களையும் இந்த நிகழ்வில் காட்சிப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடல், நதிகள் மற்றும் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா மற்றும் படகு சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த செல் 4  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்  நிறுவியுள்ள ஒரு சிறப்புப் பிரிவாகும். இது நீர் வழி சுற்றுலாவில், செயல்பாட்டுத் தன்மை கொண்ட, கடல் மற்றும் நதிகளில் நீடித்த, நிலையான பயண சுற்றுக்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவை நீர் வழி பயண சுற்றுலாவிற்கான உலகளாவிய மையமாக மாற்றுவதே இதன் தொலைநோக்குப் பார்வை.

 

NAVIC செல் 4 இன் செயல்பாட்டு அலுவலரான இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் திரு விஜய் குமார், ஒரு முக்கிய உரையை நிகழ்த்துவார்.

 

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் என்பது நாட்டில் உள்நாட்டு நீர் போக்குவரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு முன்னணி அமைப்பாகும். நிலையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு நதிப் பயண சுற்றுலாவை ஊக்குவிப்பதிலும் திறமையான நீர் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதிலும் ஆணையம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

 

இந்தியா கடல்சார் வாரம் 2025 குறித்த விளக்கக்காட்சியுடன் மாநாடு முடிவடையும். அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு, கடல்சார் துறையில் முன்னேற்றங்கள், வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கு உத்வேகம் அளிக்கிறது

*****

(Release ID: 2157161)

AD/SM/SG

 


(Release ID: 2157191)